தமிழ்நாடு அரசு ஓட்டுனர் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ஓட்டுனர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடம் : ஓட்டுனர்

சம்பளம் :

ரூ. 19,500 முதல் 62,000/- வரை

கல்வித் தகுதி :

குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த கனரக வாகனம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு வருடம் கனரக வாகம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :
குறைந்த பட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 06.01.2020 முதல் 08.01.2020 வரை அரசு தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூர், சென்னை - 8 ல் பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றொப்பமிட்ட தங்களது கல்விச் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு புகைப்படங்கள், முன்னுரிமை கோரும் சான்றின் நகல், கனரக ஓட்டுநர் உரிமம் மற்றும் கனரக வாகனம் ஓட்டிய அனுப சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து 09.01.2020 -க்குள்ளதாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2019/12/2019122768.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

இயக்குநர் மற்றும் பேராசிரியர் அலுவலகம்,
அரசு தாய் சேய் நல மருத்துவமனை,
எழும்பூர், சென்னை - 8.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2020 மாலை 5.45 மணி வரை