காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலை


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டும் வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 108 குரூப் பி, சி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜனவரி 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 108

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.Senior Executive (Economic Research)- 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

2.Executive (Village Industries) - 56
3.Executive (Khadi)-06
4.Junior Executive (FBAA)-03
5.Junior Executive (Adm. & HR)-15
6. Assistant (Village Industries)- 15
7.Assistant (Khadi) -08
8.Assistant (Training) -03
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், பொருளாதாரம், புள்ளியியல், வணகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, சிஏ, டெக்ஸ்டைல் துறையில் டிப்ளமோ, அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvic.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kvic.org.in/kvicres/update/others/Detailed_Advertisement_20122019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2020