நான் சுத்த Non-Veg என்று ஆடு, கோழி பின்னால் செல்பவர்களா நீங்கள்.. சுவைக்கு மயக்கி ஆரோக்கியத்தை இழக்காதீர்கள்...


நான் சுத்தமான அசைவம். இவை இல்லாமல் சாப்பிட்ட திருப்தியே எனக்கு இருக்காது என்பவர்கள் இன்று அதிகரித்துவருகிறார்கள். சைவ உணவை விட இன்று அசைவ உணவு எடுத்து கொள்பவ ர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது அசைவ வகைகள் உடலுக்கு கெடுதல் தரும் என்று சொல்ல முடியாது. ஆனால் முழுக்க முழுக்க அசைவம் என்னும் போது அவை உடலுக்கு தருவது கெ டுதல் மட்டுமே என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும்.
​அசைவ உணவு வகை


நாட்டு கோழி, ஆட்டுக்கறி, பிராய்லர் கோழி, நண்டு, இறால், மீன் போன்றவைத்தவிர நத்தை, வான் கோழி, புறா, முயல், மாடு போன்றவற்றையும் விட்டுவைப்பதில்லை. இவையெல்லாம் ஒரு காலத் தில் நமது முன்னோர்கள் சாப்பிட்டாலும் உடலளவில் பெரிய மாற்றங்களை அவர்கள் சந்திக்க வில்லை. காரணம் அவர்கள் உணவை மருந்தாக எடுத்துகொண்டால் ஒவ்வொரு பொருளை சமைக்கும் போதும் அதற்கு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருளையும் பயன்படுத்தி வந்தார்கள். அதனால் அசைவ உணவுகள் அவர்கள் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்ததில்லை.
​மாறிய உணவு பழக்கம் அசைவத்திலும்உணவு பழக்கங்களில் பலவிதமான மாற்றங்களை பழகிவிட்டோம். அசைவம் வீட்டில் மட்டுமே என்ற காலம் இப்போது இல்லை. இன்று வீதிக்கு வீதி சைவ உணவகங்களைக் காட்டிலும் அசைவ உணவகங்கள் நிறைந்திருக்கின்றன. தள்ளுவண்டி கடைகளும் அசைவ உணவுகளை குறிவைத்து நடத்தப்படுகிறது.

இவர்களது நோக்கம் அசைவ பிரியர்களை கவர்வதற்காக என்பதால் அசைவ வகைகளும் விதவித மாக கண்ணை கவரும் கலரை நிரப்பு அதிகப்படியான எண்ணெயில் மிதக்கவிட்டும், பொறிக்க விட்டும் தயாரிக்கப்படுகின்றன. நாக்கில் எச்சில் ஊறவைக்கும் வகையில் இன்று மட்டன், சிக்கன் இரண்டு வகை உணவுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட வெரைட்டிகளில் செய்யப்படுகிறது. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் இந்த ருசியில் தான் வளர்கிறார்கள்.
சற்று கூர்ந்து பார்த்தால் இதில் சுவைக்கு சேர்க்கப்படும் கலவையும். மிதமிஞ்சிய எண்ணெயும் கலர் சேர்க்கையும் உடலுக்கு தீங்கை மட்டும் இழைப்பதை உணரலாம். அது மட்டுமல்லாமல் விதவிதமான அசைவ உணவுகள் இன்று வீட்ட்டில் தயாரிப்பதை விட வெளியில் தான் அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதனால் சுகாதாராமும் கேள்விக்குறியாகிறது.

​கோழி இறைச்சிஇறைச்சியை விரும்பும் பலருக்கும் இவைதான் முதன்மையான பிரதான உணவாக இருக்கிறது. இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் உரிய பருவத்தில் வளர்ச்சியடைவய செய்யாமல் ஹார்மோன் ஊசிகள் செலுத்தி விரைவில் இறைச்சியாக்கப்படுகிறது.
பெண்குழந்தைகள் நாக்குக்கு சுவைகூட்டும் மென்மையான இறைச்சி என்று சிக்கன் வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் விலையும் குறைவு என்பதால் அடிக்கடி பிராயலர் கோழி வீட்டில் கொதிக்கிறது. இதை சாப்பிடும் குழந்தைகள் 10 வயது நிறைவதற்குள் பூப்படைந்துவிடுகிறார்கள்.
கோழி அடிச்சு குழம்பு வைத்த முன்னோர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள். ஆனால் அவை யெல் லாம் நாட்டுக்கோழி. தானியங்களும், பூச்சிகளையும், உரங்களையும் தின்று வளர்ந்த ஆரோக்கி யமான நாட்டு கோழி. உடம்பு சரியிலாமல் காய்ச்சலில் தவித்தபோது இந்த கோழியை அடித்து அம்மியில் மிளகு சேர்த்து அரைத்த மசாலாக்களை சேர்த்து காய்ச்சலை விரட்டிவிடுவார்கள். இப்போதும் செய்யலாம் ஆனால் தானியங்கள் தின்று ஆரோக்கியமான நாட்டு கோழி உடலுக்கு ஆரோக்கியம் தான் என்பதால் விலையைப் பாராமல் தேடி உண்ணுங்கள்.
கோழி இறைச்சியில் புரதம் நிறைந்திருக்கிறது என்பார்கள். எப்போதாவது உண்ணலாம். அதிலும் கலர் கலர் பெளடர்களையும், அதிக எண்ணெயும் சேர்க்காமல் மிளகு சேர்த்து சமைக்கலாம். பொது வாக மருத்துவர்களது அட்வைஸ் பிராய்லர் கோழிக்கும் அதன் முட்டைக்கும் டாடா காட்டி விடுங் கள்.

​ஆட்டிறைச்சிஆடுகள் இலை தழையை மேய்ந்து கொண்டிருந்த காலம் அல்ல இது. கண்ணுக்கு நேராகவே பேப்பர் உண்பதையும் பார்த்துகொண்டிருக்கிறோம். போதிய சத்துகள் இல்லாமல் இருக்கும் ஆட்டின் இறைச்சியில் இன்று மிதமிஞ்சிய கொழுப்புகள் மட்டுமே நிறைந்திருக்கிறது. அப்படியி ருக்கும் ஆட்டின் இறைச்சி மட்டும் மமுழுமையான நன்மை தரும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது.
மருத்துவ குணமிக்க ஆட்டின் எலும்பு சூப் நம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் அவ்வ போது இந்த இறைச்சி சாப்பிடுவதும் உடல் எடையை அதிகரிக்கும். உடலில் கெட்ட கொழுப்பை தூண்டிவிடும். உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். பக்கவாதம் போன்ற இன்னபிற நோய்களையும் கொண்டுவரும் என்பதால் உங்கள் கவனத்தை அசைவத்தில் இருந்து சைவத்துக்கு திருப்புங்கள்.

​எப்போது சாப்பிடலாம்அசைவ உணவு பிரியர்களால் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது. இதில் இருக்கும் நன்மை யைப் பெற வாரம் ஒரு முறை குறைந்த அளவு மட்டுமே இறைச்சி எடுத்துகொள்ளலாம். அதிக கெடு தல் தரும் கலர், எண்ணெய் சேர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும்.

பிராய்லர் கோழி இறைச்சியை கண்டிப்பாக குறைத்து எடுக்க வேண்டும். ஆட்டு இறைச்சியியிலும் ஆட்டின் எலும்பு பகுதி எப்போதும் நன்மை பயக்குமென்பதால் குழந்தைகளுக்கும் இறைச்சியை பழக்காமல் ஆட்டின் ஈரல், எலும்பு, கால் பகுதியை கொடுத்து பழக்குங்கள். இயன்றவரை வெளி யிடங்களில் சாப்பிடுவதை தவிருங்கள்.
கடல் வாழ் உணவுகள் நன்மை தருபவை. ஆனால் அவற்றையும் எண்ணெயில் பொறிக்காமல் சாப் பிடுவது மேலும் ஆரோக்கியமே.

குறைந்த அசைவம் நிறைந்த ஆரோக்கியம்அசைவத்தை குறைத்தால் அதிகப்படியான பலன் கிடைக்கும் தொடர்ந்து அசைவ உணவுகளை எடுத்துகொள்பவர்கள் படிப்படியாக குறைக்கும் போது உடல் எடையும் கணிசமாக குறையும். இத யத்தின் ஆரோக்கியம் வலுப்படும். உயர் இரத்த அழுத்த பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அசைவ உணவுகளை விரும்பி உண்பவர்களை விட சைவ உணவுகளை உண்பவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அசைவத்துக்கு மாற்றாக புரதச்சத்து நிறைந்த காய்கறிகள் எடுத்துகொள்வதும் நன்மை பயக்கும். ருசிக்கும் சுவைக்கும் மயக்கும் நாக்குக்கு என்ன தெரியும் நமது உடல் ஆரோக்கியம்.