Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 14, 2019

SBI வங்கியின் அதிரடி சேமிப்பு திட்டம்!


சேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பானது பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பது தான். வங்கிகள் பல இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க எஸ்பிஐ அதிரடியாக மிகச் சிறந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது தொடர் வைப்பு நிதிஅதாவது ரெக்கரிங்க் டெபாசிட் ஆகும். அதிக லாபம் பெறக்கூடிய திட்டமும் இது தான்.




மாத சம்பளம் வாங்குவோர் இந்த திட்டத்தில் இணைந்து நல்ல லாபத்தைப் பெற முடியும். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும்.
இந்த திட்டத்தில் இருக்கும் ஒரு மாபெரும் சிறப்பு சலுகை என்னவென்றால் வெறும் ரூ.100 இருந்தாலே வங்கியில் கணக்கை தொடர முடியும்.மாதம் 10 ரூபாய்முதல் இந்த கணக்கில் சேமிக்கலாம்.
குறிப்பாக இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகப்படியான சலுகை வழங்கப்படுகிறது.
அவர்கள் சேமிக்கும் பணத்திற்கு, 7 சதவீதம் முதல் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.




1 வருடம், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என திட்டத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்கள்மாறுபடுகிறது. வழக்கமான சேமிப்பு கண்க்கில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்குமோ அதை விட 1 சதவீதம் இதில் அதிகம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.