Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 1, 2019

TNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழக அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள தொல்பொருள் அதிகாரி பணியை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

தொல்பொருள் அலுவலர் : 18 காலிப்பணியிடங்கள்

சம்பளம் : ரூ. 36,200 முதல் 1,14,800/- வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி :

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.




வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவுக் கட்டணம் : ரூ. 150/- (ஒரு முறை மட்டும்)
தேர்வுக் கட்டணம் : ரூ. 100/-

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :




தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக http://tnpsc.gov.in/ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://tnpsc.gov.in/Notifications/2019_33_notifn_Archaeological_Officer.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.12.2019