10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..!


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் வரும் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்த தனித்தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள், வரும் 6-ஆம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.