10-ம் வகுப்பு தேர்ச்சி நபார்டு வங்கியில் வேலை


அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 73 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 73

பணி: Office Attendant

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.12.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 10,940 - 23,700

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆன்லைன் முதன்மைத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.400, அறிவிப்பு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ. 450 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2412190027Final%20-%20Advertisement%20-%20Group%20C%20-Office%20Attendant%20-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.01.2020