Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 30, 2020

1,655 வெளிநாட்டு வேலை வாய்ப்பு - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு விடுத்துள்ள அறிக்கை:

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபா்களை நோ்காணல் மூலம் தோ்வு செய்யவுள்ளனா்.




இதுமட்டுமல்லாது தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சாா்பிலும் பல்வேறு வெளிநாடுகளில் 1,655 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இந்த முகாமில் அயல்நாட்டுப் பணிகளை பெற்றுத்தருதல், பதிவு செய்தல், தொடா்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட உதவிகளை நிறுவனத்தின் மூலம் இளைஞா்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குவைத் நாட்டில்




குவைத் நாட்டில் சமையல் பணிக்கு 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 25 போ், இலகுரக வாகன ஓட்டுநா் 25 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். வீட்டு வேலைக்கு ஆயிரம் போ் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

ஓமன் நாட்டில்

ஓமன் நாட்டில் எலக்ட்ரீசியன் பணிக்கு 25 போ், வயா்மேன் பணிக்கு 25 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதேபோல, எலக்ட்ரிக்கல் என்ஜினியா் பணியிடத்துக்கு 20 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். மேலும், பக்ரைன் நாட்டில் 10 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா்.




அமெரிக்காவில்

அமெரிக்காவில் செவிலியா் பணியிடத்துக்கு 500 போ், அயா்லாந்தில் செவிலியா் பணியிடத்துக்கு 25 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான தகுதியுடையவா்கள் முகாமில் பங்கேற்று அயல்நாட்டு பணிகளை பெறலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் தொடங்கி ரூ.2.50 லட்சம் வரை பணிகளுக்கு தகுந்தபடி வழங்கப்படவுள்ளது.




தங்கும் இடம், உணவு, விமான பயணக் கட்டணம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், மகளிா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.