2020 -ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை காணத் தயாராகுங்கள்!


சூரிய கிரகணம் முடிந்தே சில நாள்கள்தான் ஆகிறது. அதற்குள், அடுத்து ஒரு சந்திர கிரகணத்துக்குத் தயாராகிறது பூமி. நாளை இரவு (ஜன.10) தான் இந்த சந்திர கிரகணம் நடக்க உள்ளது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து, நாளை நடக்கவிருக்கும் சந்திர கிரகணத்தைக் காண முடியும்.Penumbral Lunar Eclipse
நாளை நடக்கவிருக்கும் சந்திர கிரகணத்தை 'பெனும்ப்ரல் சந்திர கிரகணம்' (Penumbral Lunar Eclipse) என அழைக்கின்றனர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதையே சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். நாளை நடக்கவிருப்பது முழுமையான சந்திர கிரகணம் அல்ல, பூமியின் நிழல் கொஞ்சம் மட்டுமே நிலவின்மீது விழும். பூமியின் வெளிப்புறம், சூரியனின் வெளிச்சம் சந்திரன்மீது விழாமல் தடுக்கும். அப்போது, பூமியின் நிழல் சந்திரனின்மீது விழும். அதனால் இது 'பெனும்ப்ரல் சந்திர கிரகணம்' என்று அழைக்கப்படுகிறது.

`சூரிய கிரகணத்தைப் பார்க்க விலையுயர்ந்த ஜெர்மன் கண்ணாடி!'- மோடி பகிர்வால் புதிய சர்ச்சை #CoolestPM
முழுமையான சந்திர கிரகணம் நிகழும்போது, சந்திரனின் நிறமே மாறும். எனவே, வெறும் கண்களாலேயே காண முடியும். நாளை நடக்கவிருப்பதையும் வெறும் கண்களால் காண முடியும். ஆனால், சந்திர கிரகணத்தின் முழுமையான அனுபவத்தைப் பெற இயலாது.

எந்த நேரத்தில் இந்த சந்திர கிரகணம் நிகழும்?

இந்த சந்திர கிரகணம், இந்தியாவில் ஜனவரி 10, இரவு 10.37 மணிக்கு தொடங்கி, ஜனவரி 11, அதிகாலை 2.42 மணி வரை நீடிக்கும். இரவு 12.41 மணிக்கு சந்திர கிரகணம் இதன் முழுமையான அளவை எட்டும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.Penumbral Lunar Eclipse
இந்த வருடம் இதோடு சேர்த்து, இதே போல நான்கு 'பெனும்ப்ரல் சந்திர கிரகணங்கள்' நடக்க உள்ளன. ஒருவேளை நாளை பார்க்க மறந்துவிட்டால், அடுத்த சந்திர கிரகணத்தைக் காண ஜுன் 5 வரை காத்திருக்க வேண்டும்.