Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 23, 2020

ஜூன் 26, 27 தேதிகளில் ஆசிரியா் தகுதித் தேர்வு


வரும் 2020-21-ஆம் ஆண்டுக்கான பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் தேர்வு திட்ட அட்டவணையை ஆசிரியா் தேர்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது.

அதில் 2020-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தேர்வு (டெட்) ஜூன் 27, 28 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.




ஆசிரியா் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவா்களின் வசதிக்காக, பணியாளா் தேர்வு ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியா் தேர்வு வாரியம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது.
அதன்படி, தமிழக அரசு தொடக்கப் பள்ளி கல்வித் துறை வட்டார கல்வி அலுவலா் பதவியிடங்களில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான தோவு 2020 பிப்ரவரி 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பதவியிடங்களில் காலியாக உள்ள 1,060 பணியிடங்களுக்கான தேர்வு 2020 மே 2, 3-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
2020-21-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோவு (டெட்) ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை மே 4-ஆம் தேதி வெளியிடப்படும். மேல்நிலைக் கல்விப் பிரிவில் காலியாக உள்ள 497 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான நியமன அறிவிக்கை ஜூலை 1-இல் வெளியிடப்பட உள்ளது.




இடைநிலைக் கல்வி ஆசிரியா் பணிக்கான 730 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை ஜூலை 9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதுபோல, உயா்நிலை ஆசிரியா் பதவிகளில் காலியாக உள்ள 572 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை ஜூலை 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும் விவரங்களை வலைதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.