கூட்டுறவு வங்கியில் வேலை.. காலியிடங்கள் 300.


சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த உள்ள காலியிடங்கள்: 300
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை-1

உதவியாளர் - 176, சம்பளம்: மாதம் ரூ.18,800 - 56500

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4

உதவியாளர் - 57, சம்பளம்: மாதம் ரூ.13,000 - 45460

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம். சென்னை-18

உதவியாளர் - 58, சம்பளம்: மாதம் ரூ.15,000 - 62500

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை-10

இளநிலை உதவியாளர்- 06, சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,8000
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை-93

இளநிலை உதவியாளர் - 03, சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

வயதுவரம்பு 01.01.2019 இன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 01.03.2020, ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.02.2020

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும்​ முறை: www.tncoopsrb.in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.250 கட்டணமாக கட்ட வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.