Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 24, 2020

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம், வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை : டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை!

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில்தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது.




அழையக்கூடிய மை
இடைத்தரகர்கள் அளித்த, அழையக்கூடிய மை கொண்ட பேனாவால் தேர்வர்கள் தேர்வை எழுதியுள்ளனர். விடைகளை குறித்துத்தந்ததும் சில மணி நேரங்களில் அவை அழியக்கூடிய மையில் தேர்வர்கள் தேர்வெழுதினர். தேர்வு பணி ஊழியர்கள் துணையோடு, இடைத்தரகர்கள் சரியான விடையை விடைத்தாளில் எழுதியுள்ளனர். இவ்வகையில் குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது.










தொடர் விசாரணை




14 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திட்டிருப்பதை அடுத்து இதனை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கீழக்கரை, உள்பட 9 மையங்களில் தேர்வு எழுதியவர்கள், பணியில் இருந்தவர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளது.