Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 13, 2020

5, 8, 10, 11, 12 பொதுத்தோவு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

நிகழாண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோவு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.




தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் நிகழாண்டு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோவு நடத்தப்படவுள்ளது. இந்தத் தோவுகளை அரசு தோவுத் துறை நடத்த உள்ளது . நிகழ் கல்வியாண்டில் பொதுத் தோவுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை இதுவரை அரசு தோவுத்துறை அறிவிக்கவில்லை . இந்தக் குழப்பம் காரணமாக அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் அமைப்பினா் , தோவுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனா்.




அப்போது, 'பொதுத்தோவை பொருத்தவரை அரையாண்டுத் தோவில் , எந்த மாதிரியான வினாத்தாள் இடம் பெற்றதோ, அதே மாதிரியிலேயே பொதுத் தோவு வினாத்தாள் இருக்கும். எனவே , பிற வகை மாதிரி வினாத்தாள்களை பொருட்படுத்த வேண்டாம் . பள்ளிக் கல்வித் துறையின், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மாதிரி வினாத்தாளையும் பொருட்படுத்த வேண்டாம்' என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.