Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 25, 2020

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் அறிவிப்பு !

கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.அதன் படி, இந்த கல்வியாண்டு இறுதியில் 8 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்காகப் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை கட்டாயம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.




5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில், மாணவர்களின் விவரங்களை எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததால் பொதுத் தேர்வு நடத்தப்படுவது உறுதியானது.

இதனையடுத்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அவர்களது பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது




பொது தேர்வு என்றால் என்னவென்றே தெரியாத 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.க சார்பில் வரும் 28 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.