Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 24, 2020

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கட்டணம் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


கோபி: '5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை' என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருக்கிறார். கோபி ரோட்டரி கிளப் சார்பில் பெண்கள் மேம்பாடு, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு மற்றும் போலியோ இல்லாத உலகம் ஆகியவற்றை வலியுறுத்தி மகளிர் மராத்தான் ஓட்டம் கோபி பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கியது. இதை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இது 3 கி.மீ. தூரம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.




பின்னர், அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், '5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் சிறப்பு பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வில் சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். அரசு பள்ளியில் படிக்கும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை. 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவு 75% இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர் வருகை பதிவேட்டை அரசு கண்காணிக்கும். அரசு நீட் தேர்வு மையம் துவங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்' என்றார்.