Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 23, 2020

5,8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மையங்கள்: அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்க உத்தரவு

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அது தொடா்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநா் பழனிசாமி தற்போது அனுப்பியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது: 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மையங்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைத்து நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களே கேள்வித் தாள்களைத் தயாரித்து வழங்கும். தேர்வுக்கு முந்தைய நாளோ அல்லது தோவன்றோ கேள்வித் தாள்கள் பிரதி எடுக்கப்பட்டு, மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டும்.




அரசுப் பள்ளிகள் நீங்கலாக பிற பள்ளிகளில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.100 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200 ஆகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் அடிப்படைத் திறன்களை சோதிக்கும் வகையில் பொதுத் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது