8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை


சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இடஒதுக்கீடு : பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு : தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது தற்காலிக அடிப்படையிலோ பணிபுரிந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இந்த சலுகையானது, விண்ணப்பதாரர்களின் முன்னனுபவ ஆண்டுகள் பொருத்து மாறுபடும்.

மேற்கண்ட தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பணியில் சேருவதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், தங்களுடைய விண்ணப்பப்படிவத்தை வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.tnsic.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.