Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 25, 2020

AEBAS - தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறையில் வருகைப்பதிவு செய்யப்படாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை ( AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System ) அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் 22.01.2020 அன்று ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறையில் வருகைப்பதிவு செய்யப்படாத சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது .



வருகை பதிவு செய்யப்படாததற்கான விளக்கத்தினை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களின் தலைமை அலுவலர்கள் உரிய விளக்கத்தினை 28.01.2020 மாலை 04.00 மணிக்குள் இவ்வியக்ககத்திற்கு சமர்ப்பிக்குமாறும் , மேலும் முறையாக தினந்தோறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் தொட்டுணர் கருவி முறையில் வருகை பதிவு செய்யப்பட்டுவருகிறதா என்பதை இணையதள வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது .




இனிவரும் காலங்களில் இம்மாதியான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க சார்நிலை அலுவலர்களான மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது . மேலும் , தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவு சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தினந்தோறும் பதிவுசெய்யப்படவேண்டும் . அவ்வாறு வருகை பதிவுசெய்யப்படாத அலுவலகங்கள் மற்றம் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கலாகிறது .