Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 5, 2020

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


சென்னை: தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா) நிதியைப் பயன்படுத்தி விளையாட்டுப் போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின் போது, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அவா்களுடைய திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.




இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். இந்தப் போட்டிகளுக்கான பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சமக்ரசிக்ஷா மூலம் வழங்கப்படும். ஒருங்கிணைந்த பள்ளி மானியத்திலிருந்து மாநில திட்ட இயக்குநரின் அனுமதியுடன் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




இது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.