உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் நிறுவனத்தில் வேலை


உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் நிறுவனத்தில் காலியாக உள்ள 122 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 122
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Senior Manager (Design- Mechanical)- PCE - 01
2. Senior Manager (Design-Electrical)- 02 UR
3. Assistant Company Secretary - 01
4. Deputy Manager (Finance)-01
5. Assistant Manager (Finance) - 01
6. Management Trainee (Chemical)- 09
7. Management Trainee (Mechanical)- 01
8. Management Trainee (Fire & Safety)- 02
9. Management Trainee (Marketing)- 05
10. Technician (Process)- 24
11. Technician (Mechanical) -15
12. Technician (Electrical) - 02
13. Technician (Instrumentation)- 07
14. Technician (Civil)- 04
15. Draughtsman Kerala - 02
16. Craftsman Fitter Cum Mechanic Kerala - 07
17. Craftsman Instrumentation Kerala - 01
18. Assistant General (Kerala, Karnataka, Andhra Pradesh) - 08
19. Assistant Finance (Kerala) - 02
20. Depot Assistant (Karnataka,Tamilnadu) - 02
21. STENOGRAPHER (Kerala) - 02
22. CANTEEN SUPERVISOR(Kerala) - 02
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 26, 35 மற்றும் 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, பொறியியல் துறையில் டிப்பளமோ, டிகிரி, மேலாண்மைத் துறையில் முதுகலை, வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 1 முதல் 10 வரையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.1180, 11 முதல் 22 வரையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.590 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://fact.onlinereg.in/docs/Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2020