செய்முறை பயிற்சி விண்ணப்பிக்க வாய்ப்பு


வரும் மார்ச்சில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், வரும், 6ம் தேதி முதல், 13ம் தேதிக்குள், மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி, பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பின், தங்களுக்கு ஒதுக்கப்படும் பள்ளிகளுக்கு சென்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும்.அதேபோல், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்த பின், அதற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டை, தேர்வு துறை சேவை மையத்தில் சமர்ப்பித்து, பொது தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதற்கும், 6ம் தேதி முதல், 13ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, அரசு தேர்வு துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.