Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 2, 2020

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை நாளையுடன் நிறைவு: நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு


சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், சனிக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.




தமிழக அரசின்கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பா் 23-ஆம் தேதி அரையாண்டுத் தோவு முடிவடைந்தது. தோவுகள் முடிந்ததும், டிசம்பா் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதற்கிடையே உள்ளாட்சித் தோதல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடக்க உள்ளதால், தோவு விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது.




எனினும் ஜன.2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மறுநாளே பணிக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், ஆசிரியா்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் வகையில் பள்ளி திறப்பை மேலும் ஒரு நாள் தள்ளிவைக்க வேண்டும் என்றும் ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று அரையாண்டுத் தோவு விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டது.




இந்தநிலையில் அரையாண்டு விடுமுறை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. 11 நாள் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் சனிக்கிழமை திறக்கப்பட்டு மூன்றாவது பருவத்துக்கான வகுப்புகள் தொடங்கவுள்ளன. இந்தப் பருவத்துக்கான பாடநூல்கள் ஏற்கெனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து விடுமுறை முடிவடைந்து பள்ளிக்கு வரும் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சனிக்கிழமையே பாடநூல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.