சமையலர், துப்புரவு பணியாளர்களுக்கு நேர்காணல்!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமையலர் காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் 20 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் ஏ. சண்முகசுந்தரம் அளித்த அறிக்கையின்படி,

ஆதிதிராவிதர், பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள விடுதி காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் ஜூலை 20 முதல் 22 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம் . இதில் , வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில்
விண்ணப்ப எண் 1 முதல் 280 வரை உடையவர்கள் 20ஆம் தேதி காலையும் ,

281 முதல் 463 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 20 ஆம் தேதி மாலையும் ,

மற்ற விண்ண ப்பதாரர்களில் 1 முதல் 525 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 21 ஆம்தேதி காலையும்,

526 முதல் 1050 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 21 ஆம் தேதி மாலையும் , 1051 முதல் 1575 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 22 ஆம் தேதி காலையும்,

1576 முதல் 2205
வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 22 ஆம் தேதி மாலையும் நேர்காணலில் பங்கேற்கலாம் எனவும் அறிவிப்பு.