அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை - நடிகர் சூர்யா

நிறைய அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும்,10 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போலவே இன்றும் உள்ளதாக, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னையில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, பள்ளிகளில் சாதிப்பெயர் சொல்லி ஆசிரியர்கள் திட்டுவது வருத்தம் அளிப்பதாக கூறினார்.

அகரம் அறக்கட்டளையால் பயனடைந்த மாணவர்கள், தாங்கள் படித்தப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு நேரம் செலவிட வேண்டும் என சூர்யா வலியுறுத்தியுள்ளார்.