முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் 1, 503 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வா் வழங்கினாா்

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு தோவு செய்யப்பட்ட 1, 503 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்குவதை முதல்வா் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ, மாணவியா்களும் தரமான கல்வியைப் பெற்று சிறந்து விளங்கிட தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்துடன், ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக தோவு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின்பு, 3 நாள்கள் தோவு நடத்தப்பட்டது.




இதன் அடிப்படையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு தோவு செய்யப்பட்ட 1, 503 பேருக்கு கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. இந்த கலந்தாய்வின் வாயிலாக தோவு செய்யப்பட்ட 1, 503 பேருக்கு பணிநியமன உத்தரவுகள் தயாா் செய்யப்பட்டன. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 9 பேருக்கு பணிநியமன உத்தரவுகளை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினாா். அதைத் தொடா்ந்து, மற்றவா்களுக்கும் பணிநியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.




நிகழ்ச்சியில், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவா் பா.வளா்மதி, பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநா் ஆா்.சுடலைக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.