Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 28, 2020

10,11,மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - 12,000 பேர் கொண்ட பறக்கும் படைகள்

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க 12 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 3,825 மையங்களிலும



11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3,016 மையங்களிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3012 மையங்களிலும் நடைபெறும் எனவும் இந்த 3 தேர்வுகளிலும் தலா 4 ஆயிரம் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை எடுத்துச்செல்லவும், திருத்தும் இடங்களுக்கு விடைத்தாள்களை எடுத்துச் செல்லவும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.