11 ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு ரத்தாகுமா? முதல்வர் பழனிச்சாமி பதில்!!

11 வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு,  ”பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டால் தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும். அந்த மாணவர் நமது ஊரில்தான் இருக்க முடியும்.
மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரும் பாஸ் செய்து விட்டால் அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய் விடும்” என்றார்.

இடைநிற்றல் குறித்த புள்ளி விபரங்கள் யாரும் கொடுக்கவில்லை. இடைநிற்றலை தடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது என்றும் முதல்வர் கூறினார்.