Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 21, 2020

2020ம் ஆண்டுக்காண சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிப்பு!


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் நடப்பு ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான 796 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.




வயது வரம்பு - மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு மொத்தம் மூன்று கட்டங்களாக UPSC IAS Civil Services 2020 தேர்வு நடைபெறும். அவை முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகும். விண்ணப்பதாரர்கள் இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 12 பிப்ரவரி 2020.

விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 3 மார்ச் 2020.

UPSC Admit Card 2020. வெளியாகும் நாள்: ஏப்ரல் 2020. (சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படும்).




UPSC Civil Services Prelims 2020 தேர்வு நடைபெறும் நாள் : 31 மே 2020.

UPSC Civil Services Mains 2020 தேர்வு நடைபெறும் நாள் : 18 செப்டம்பர் 2020.

யுபிஎஸ்சி சார்பில் வெளியாகியுள்ள ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.upsc.gov.in அல்லது https://upsconline.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறிய https://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.