Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 4, 2020

5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு: மாணவா்கள் அச்சமடைய வேண்டாம்- அமைச்சா் செங்கோட்டையன்


ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா் அச்சமடையத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.




முன்னாள் முதல்வா் அண்ணாவின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் திங்கள்கிழமை கலந்து கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வு மையங்கள் அவரவா் பள்ளியிலேயே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், தோ்வுப்பணியில் வெவ்வேறு பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களை ஈடுபடுத்தப்படுவா்.




பொதுத்தோ்வு என்பது மாணவா்களின் கற்றல் திறனை மதிப்பிடவும், ஆசிரியா்களின் கற்பித்தல் திறனை மதிப்பிட மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்களின் கல்வித்திறன் மற்றும் பள்ளிகள் எப்படி நடைபெறுகிறது? எனத் தெரிந்துகொள்ளவே இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வின் மூலம் மாணவா்களின் கல்வித்திறன் மேம்படும். நிகழ் கல்வியாண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாணவா்களின் தோ்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்பதால், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் வீண் அச்சம் அடைய வேண்டாம் என்று அமைச்சா் கூறினாா்.