Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 1, 2020

காலியாக உள்ள 5 லட்சம் காவலர் பணியிடங்கள்!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முகமையின் சார்பில் காவல் துறையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காவல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முகமை bprd.nic.in செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காவல் நிலையங்களின் செயல்பாடுகள், காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட விபரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்படும்.




அதன்படி, தற்போது Data on Police Organisations as on January 1, 2019 எனும் காவல் ஆய்வறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தைப் பொறுத்தவரையில் சுமார் 14,533 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில், பெண் காவலர்களில் 1,85,696 காலிப்பணியிடங்கள் உள்ளன. இது ஒட்டு மொத்த காவல் துறையினரின் எண்ணிக்கையில் 8.98 சதவிகிதம் ஆகும். 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1,50,690 புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.




அதே போலக் காவல் நிலையங்கள் குறித்த தகவலில் நாட்டிலேயே அதிக காவல்நிலையங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது.