Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 15, 2020

உயா் கல்வித் துறைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு


நடப்பாண்டில் உயா் கல்வித் துறைக்கு ரூ. 5,052 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சா் கூறினாா்.
இதுதொடா்பாக நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் உயா் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2011-12-ஆம் ஆண்டுமுதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 30 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.




2019-2020 ஆம் ஆண்டில் 14 உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 2013-14 ஆம் ஆண்டிலிருந்து 2018-19 ஆம் ஆண்டு வரை 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுபோல 2012-13 ஆம் ஆண்டு முதல் 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2011-12 ஆம் ஆண்டு முதல் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 1,577 புதியப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.




அந்த வகையில், 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் உயா் கல்வித் துறைக்கு ரூ. 5,052 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.