Tamilkadal Kalvi Tholaikatchi

Tamilkadal Kalvi Tholaikatchi
TNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியீடு!


பள்ளிக் கல்வித் துறை - புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்துார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தல் - அதற்கான பணியிடங்கள் மற்றும் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.




மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி ,

1. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டம்

2.திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள தென்காசி வருவாய் மாவட்டம்

3. வேலுார் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை வருவாய் மாவட்டம் மற்றும்

4. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்

ஆகிய 5 வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து , அதன் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்டவாறு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்பட அனுமதிக்குமாறும் , மேற்படி புதியதாக தோற்றுவிக்கப்படும் 5 புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு 92 புதிய பணியிடங்கள் மற்றும் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு அனுமதி வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.




பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஆய்வு செய்து , அதனை ஏற்று , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்தார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து அம்முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு கீழ்க்கண்டவாறு தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு ரூ . 4 , 67 , 78 , 784 / - க்கு ( ரூபாய் நான்கு கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து எழுபத்து எட்டாயிரத்து எழுநூற்று எண்பத்து நான்கு மட்டும் ) நிர்வாக ஒப்பளிப்பும் , 2019 - 2020ஆம் ஆண்டிற்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்காக ரூ . 123 , 98 , 064 / - ( ரூபாய் ஒரு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து தொன்னூற்று எட்டாயிரத்து அறுபத்து நான்கு மட்டும் ) நிதி ஒப்பளிப்பும் வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது .




ஆணை :

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 5 முதன்மை கல்வி அலுவலர் உள்பட 92 புதிய பணியிடங்களை ஏற்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் அலுவலகம் உருவாகவுள்ளது.
























Label

1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்