Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 2, 2020

அசைவ உணவு சாப்பிட்டால் 'கொரோனா' வைரஸ் பரவுமா?


சென்னை:''கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, அசைவ உணவுகளை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும்,'' என, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறினார்.'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறித்து, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், அதிகாரிகளுடன், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், நேற்று ஆய்வு நடத்தினார். அதன்பின், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பில்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம். விமான நிலையங்களில், இதுவரை, 3,223 பேருக்கு, 'தெர்மல் ஸ்கேனர்' வாயிலாக சோதனை செய்யப்பட்டுள்ளது.



சீனாவில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்த, 579 பேர், தொடர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இதில், 68 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்; இவர்கள் அனைவரும், 28 நாட்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பர்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் இருந்து, வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிய, எவ்வித மாதிரிகளும் எடுக்கப்படவில்லை. தற்போது, சென்னை, 'கிங்ஸ்' ஆய்வகத்திற்கு, கொரோனா வைரஸ் கண்டறிவதற்கான உபகரணங்கள் வந்துள்ளன. தற்போது, சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.



நாளை முதல், செயல்பாட்டுக்கு வரும்.பொதுமக்கள், சாப்பிடும் முன், வெளியிடங்களுக்கு சென்று வந்த பின் என, அடிக்கடி நன்றாக சோப்பு போட்டு, கைகளை கழுவ வேண்டும். அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள், நன்கு வேக வைத்த பின், சாப்பிட வேண்டும்.இவ்வாறு பீலா ராஜேஷ் கூறினார்.