Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 21, 2020

இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்

ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. தாய்மொழியின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் 1999 முதல் பிப்., 21ல் சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'எல்லைகள் இல்லாத மொழிகள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.இந்தியாவில் அதிகபட்சமாக 'இந்தோ-ஆரியன்' மொழிக்குடும்பத்தை 74 சதவீதம் பேர் பேசுகின்றனர். இதில், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி உள்பட பல மொழிகள் உள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பத்தை 20.61 சதவீதம் பேர் பேசுகின்றனர். மத்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.




எந்த மொழி சிறப்பு ஒருவரது இதயத்தை தொட வேண்டுமெனில் தாய்மொழியில் பேச வேண்டும், மகாத்மா காந்தியும் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்தினார். இன்றைய சூழலில் தாய்மொழியில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குழந்தைகள் இளமையில் மற்ற மொழிகளில் கற்பதால், அவர்களுக்கு கற்கும் திறனும், ஆர்வமும் குறைகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது வரலாறு கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) 1952ல் உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி மக்கள் போராடினர்.




அதே ஆண்டு பிப்., 21ல் ஊரடங்கு உத்தரவையும் மீறி, தாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், பலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக 'யுனஸ்கோ' 1999ல் சர்வதேச தாய்மொழி தினத்தை உருவாக்கியது.43உலகில் 6,000 மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 43 சதவீதம் அழியும் நிலையில் உள்ளன.3மொழி என்பது தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என 3 விதமாக உள்ளன.19வது இடம்உலகில் அதிக பேர் பேசும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. தமிழ் 19வது இடத்தில் உள்ளது.




டாப்-5' மொழி எத்தனை பேர் (கோடிகளில்)1. ஆங்கிலம் 1132. சீன மாண்டரின் 1113. ஹிந்தி 614 ஸ்பானிஷ் 535. பிரெஞ்ச் 28