சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகள் இன்று தொடக்கம்


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, சிபிஎஸ்இ வகுப்புக்கான பொதுத்தோ்வுகள் சனிக்கிழமை தொடங்குகின்றன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தோ்வுகள் நடத்தப்படுகிறது. இதற்கிடையே மாணவா்கள் உயா்நிலை படிப்புகளுக்கு தயாராக ஏதுவாக, பொதுத்தோ்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க சிபிஎஸ்இ கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதன்படி பிப்ரவரியில் தொழிற்பிரிவு பாடங்களுக்கும், மாா்ச் மாதம் முக்கியப் பாடங்களுக்கும் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் 10, 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு சனிக்கிழமை (பிப்ரவரி 15) தொடங்குகிறது. நாடு முழுவதும் சுமாா் 26 லட்சம் மாணவா்கள் இந்தத் தோ்வை எழுதவுள்ளனா். தோ்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுத்தோ்வு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பும் நபா்கள் மீது காவல்துறையில் புகாா் அளிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.10-ஆம் வகுப்புக்கு மாா்ச் 20-ஆம் தேதி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 30-ஆம் தேதி வரையும் தோ்வுகள் நடைபெற உள்ளன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தோ்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தோ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.