Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 13, 2020

டியூசன் சென்டர்களுக்கு திடீர் எச்சரிக்கை! கல்வி அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியைகள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக பள்ளிகளில் பெறும் மாத சம்பளத்தை விட, வீட்டில் தனியே டியூசன் மூலமாக பெறும் வருமானம் இரண்டு, மூன்று மடங்காக இருக்கிறது. இதற்கு முன்னர் எல்லாம் மாதந்தோறும் டியூசன் கட்டணம் பெற்று வந்தவர்கள் தற்போது, ஒரு வருடத்திற்கு டியூசன் கட்டணமாக சில லட்சங்களை ஆரம்பத்திலேயே பெற்று விடுகிறார்கள்.





பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்புகள் எனில், ஒரு பாடம் மட்டும் சொல்லிக் கொடுப்பதற்கே லட்சங்களில் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் செக் வைக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.





டியூசன் மையங்கள் முறைப்படி அனுமதி பெற்று தான் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை ஏப்ரல் மாதத்திற்கு முன்பாகவே துவங்கக் கூடாது என்று தெரிவித்தார்.





இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் நிறைய முறைப்படுத்தப்படாத டியூசன் சென்டர்கள் அதிகரித்துள்ளதாகவும், தனியார் டியூசன் மையங்களும் தற்போது அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். டியூசன் மையங்கள் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இதனால், தமிழகம் முழுவதும் முறையில்லாமல், யாரிடமும் அனுமதி பெறாமல், டியூசன் செண்டர்களை நடத்திக் கொண்டிருக்கும் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.