Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 21, 2020

தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணி. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!


தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.




நிறுவனம் : தமிழ்நாடு ரூரல் டெவலப்மென்ட் அண்ட் பஞ்சாயத்து ராஜ்(டி.என்.ஆர்.டி) எனப்படும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
வேலை : ரோடு இன்ஸ்பெக்டர் எனும் சாலை ஆய்வாளர் வேலை
காலியிடங்கள் : மொத்தம் 248. இதில் மாவட்ட வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
கல்வித் தகுதி : கட்டுமான வரைதொழில் அலுவலர் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அதாவது, ITI Civil Draughtsman படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 35-க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு




சம்பளம் : சாலை ஆய்வாளர் பணிக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முக தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி : மாநில வாரியாக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. 17 முதல் 28 வரையும் இந்த தேதிகள் உண்டு. விண்ணப்பங்கள் தபால் மூலம் அல்லது நேரடியாகக் கொடுக்கவேண்டும் . மேலும் தகவல்களை பெற www.tnrd.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துங்கள்.