Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 3, 2020

பொன்னாங்கண்ணி கீரையின் பலன்கள்


பொன்னாங்கண்ணி கீரையில் பல ஊட்டச்சத்துக்கள், நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து,இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சருமத்துக்கு மிகவும் நல்லது. மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.



உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும். இதன் சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பலவித நோய்களையும் தீர்க்கும் இந்தக் கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லையே என நினைக்கக் கூடாது. வாரம் இரண்டு நாட்கள் எனக் குறைந்தது 12 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரை சாப்பிட வேண்டும்.