Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 26, 2020

பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் அதிக ஒளி மின் விளக்குகளுக்கு தடை


அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவ , மாண விகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்டமின் விளக்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .




தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநி லைப்பள்ளிகள் , தனியார் நர்சரி , மெட்ரிக் பள்ளிக ளில் மாணவர்களின் தனித்திறமைகளை மேம்ப டுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டு பல் வேறு கலை நிகழ்ச்சி கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் , கலாச்சார விழாக்கள் நடத்தப்படு கிறது . அப்போது , நடன போட்டிக்கான மேடைக ளில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகள் பயன்ப டுத்து வதால் மாணவ , மாணவிகளுக்கு கண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது . இந்த நிலையில் ,




பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : இந்தாண்டிற்கான கல்வி ஆண்டு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிய உள்ளதால் தற்போதே பள்ளிகளில் ஆண்டு விழா தொடங்கி உள்ளது . சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு விழாவில் அதி கபடியான மின் வெளிச் சத்தால் மாணவர்களின் கண்கள் பார்வை பாதிக் கப்பட்டது . இதனால் எதிர்காலத்தில் பள்ளிக ளில் இதுபோன்ற பாதிப் புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது . இதன்படி அரசு மற் றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு விழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக் கள் நடைபெறும் போது , அதிக ஒளி கொண்ட அலங்கார மின் விளக்கு கள் பயன்படுத்தக்கூடாது . பரிந்துரைக்கப்பட்ட மின் சாதன அமைப்புகள் மட் டுமே அமைத்திட வேண் டும் . இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் .




இந்த நடைமுறைகளை பின் பற்றாமல் விழா நடத்தி , பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளி நிர் வாகமுமே முழு பொறுப் பேற்க நேரிடும் . எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் , வட்டா ரக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு கவனத் துடன் விழாக்களை நடத்த வேண்டும் . இவ்வாறு அவர்கள் கூறினர் .