Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 18, 2020

பாலும் பழமும் ஒண்ணு சேரக்கூடாதாமே? உங்களுக்கு தெரியுமா?


புதுமண தம்பதியருக்கு இரண்டு வீடுகளிலும் பால், பழம் கொடுத்து வரவேற்பார்கள். பாரம்பரியம் பாரம்பரியமாக முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட விஷயங்களில் மாறாமல் இருக்கும் விஷயத்தில் இதுவும் ஒன்று. இவ்வளவு ஏன் முதல் இரவில் கூட பாலும் பழமும் கண்டிப்பாக இருக்கும். பால், பழங்கள் இரண்டுமே உடலுக்கு சக்தி தரக்கூடியது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து எடுக்ககூடாது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கும் என்கிறது இது ஆய்வு ஒன்று.




பாலோடு வாழைப்பழத்தை கலந்து சாப்பிட்டால் வயிற்றில் ஜீரண உறுப்புகள் வலுவிழந்து போகுமாம். ஆயுர்வேத மருத்துவத்திலும் இவை இரண்டையும் ஒன்றாக எடுக்ககூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாலுக்கும் வாழைப்பழத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த ஆயுர்வேதம்.




பால் கால்சியம் நிறைந்தது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து உண்டு. இரண்டுமே உடலுக்கு ஆற்றல் தரக்கூடியவை தசைகளுக்கு வலு வூட்டக்கூடியவை. ஆனால் இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது அவை ஜீரண செயல்பாட்டில் குறைகளை உண்டாக்கிவிடுகிறதாம். இவை இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது வயிற்று போக்கு, வாந்தி,ஒவ்வாமை பிரச்சனையை உண்டு செய்கிறதாம். சமயங்களில் இருமல், வாந்தியை அதிகரித்துவிடவும் செய்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
தற்போது பனானா மில்க்ஷேக் என்னும் பானம் அனைவரிடமும் பிரபலமாகிவருகிறது. வாழைப்பழத்தை துண்டுகளாக்கி பாலில் அடித்து சர்க்கரை சேர்த்து கொடுக்கப்படும் இந்த பானம் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக இருக்கிறது. ஆனால் ஆய்வின் படி கண்டிப்பாக இதை சேர்த்து எடுத்துகொள்ளகூடாது.



குறீப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இதை இரண்டையும் சேர்த்து எடுக்ககூடாதாம். ஏனெனில் இரண்டுமே குளிர்ச்சி என்பதால் இவர்களுக்கு மேலும் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

கர்ப்பக்காலத்திலும், உடலுக்கு ஃபிட்நஸ் பயிற்சி செய்பவர்களும் கூட பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து எடுத்துகொள்வது வழக்கம். ஆனால் இது உடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். சேர்த்து எடுத்து கொள்வது தான் பிரச்சனை. ஆனால் இதை இடைவெளி விட்டு சாப்பிடலாம் என்கிறார் கள்.