Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 8, 2020

ஜூன் மாதம் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம்?





தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23 , 928 , நடுநிலைப் பள்ளிகள் 7 , 260 , உயர் நிலைப் பள்ளிகள் 3 , 044 , மேல்நிலைப்பள்ளிகள் 2 , 727 ஆகியவை உள்ளன . இதில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரி யர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இவர்கள் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் கற்ப்பிகின்றனர் . கடந்த காலங்களில் பதிவு மூப்பு அடிப்ப டையில் பணிநியமனம் செய்து வந்தனர்.

பின்னர் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றனர் . இந்நிலையில் ஆண்டுதோறும் இடைநிலைஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர் .




மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது . இதனால் இடைநிலை ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் அதிகரித்து வருகிறது . தற்போது மாநிலம் முழுவதும் 3 , 624 பணியி டங்கள் காலியாக உள்ளது .

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகா ரிகள் கூறியதாவது : மாநிலம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மொத்தம் 3 , 624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன .

அதாவது , அரியலூர் மாவட் டத்தில் - 47 , கோவை - 56 , கடலூர் - 102 , தருமபுரி - 355 , ஈரோடு - 108 , காஞ்சிபுரம் - 123 , கரூர் - 1 , கிருஷ்ண கிரி - 830 , நாகப்பட்டி னம் - 06 , நாமக்கல் - 49 , புதுக்கோட்டை - 75 , சேலம் - 138 , தஞ்சாவூர் - 44 , நீலகிரி - 25 , திருப்பூர் - 168 , திருவள்ளூர் - 82 , திருவண் ணாமலை - 578 , திருவாரூர் - 28 , வேலூர் 393 , விழுப்புரம் - 416 ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன .




இந்த பணியிடங்களுக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்வு நடத்தி இடைநிலை ஆசியர்களை நியமனம் செய்யப்பட உள்ள னர் . அதற்காக தான் மாவட்ட வாரியாக காலி பணியிட பட்டியல் வெளியிடப்பட்டுள் ளது . இவ்வாறு அவர்கள் கூறினர் .