Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 3, 2020

வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


கரும்புச்சாற்றில் இருந்துதான் வெல்லம் தயாரிக்கப்படுகிறது . சில நேரங்களில், பனஞ்சாறு மற்றும் தேங்காய் ஆகியவற்றில் இருந்தும் இந்த இனிப்பு செய்யப்படுகிறது.



நமது உடலில் காணப்படுகிற தூசுகள், தேவையில்லாத துகள்களை வெளியேற்றுவதற்கும், அதன்மூலம் சுவாசப் பாதை, நுரையீரல், உணவுக்குழாய், வயிறு மற்றும் பெருங்குடல், சிறுகுடல் ஆகியவை எவ்வித தடையும் இல்லாமல் செயல்படுவதற்கும் வெல்லம் உதவுகிறது. உள்ளரங்கம் மற்றும் வெளியரங்கத்தால் உண்டாகுகிற சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்வதில், வெல்லத்திற்கு இணை எதுவும் இல்லை. அலோபதி மருத்துவத்தில் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்கு வெல்லம் ஒப்பற்ற மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.