Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 9, 2020

பணிநியமனத் தேர்வா? டெட் தேர்வா? குழப்பத்தில் ஆசிரியர்கள்!!

TET 2020 தேர்வு மட்டும் நடைபெறுமா? அல்லது ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு நியமனத்தேர்வு நடைபெறுமா? குழப்பத்தில் தவிக்க விடும் கல்வித்துறை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட ஆண்டு தேர்வு அட்டவணைப்படி இந்த ஆண்டு தேர்வு நடைபெறுவது உறுதி. ஆனால் பணிநியமனம் செய்வதற்கு முன் நியமனத்தேர்வு ஒன்றும் எழுதவேண்டும் என்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுதியான தகவலாகும். அமைச்சர் செங்கோட்டையனும் அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.ஆசிரியர் வேலைக்கு பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் படிப்பு முடித்து அப்புறம் டெட் தேர்வு பாஸ் பண்ணாலும் போதவில்லையாம். நியமனத்தேர்வு எழுதனுமாம். அதற்கு தேர்வுமையம் அந்தமான்ல போட்டாலும் ஆச்சரியமில்லை.




ஏனென்றால் முறைகேட்டை தடுப்பதற்காகனு ஒரு அறிவிப்பு. வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வுக்கு 300 கிமீ தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் அதிகளவில் தேர்வர்கள் தேர்வை புறக்கணிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். ஆங்கிலவழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி படிங்கப்பானு சொல்லி இருவழிக் கல்வியிலும் அரைகுறையாகவே அறிந்து கொண்டு திணறும் தலைமுறையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர் சமுதாயம் பெரும் உளவியல் சிக்கலில் இருப்பது உண்மை.




5 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து சோட்டாபீம் காப்பாற்றியது போல ஆசிரியர்களைக் காப்பாற்ற ஒரு சக்திமான் வருவார்னு நம்புவோம். பள்ளிக்கல்வி செயலரை மாற்றியதால் 2013,2017,2019 டெட் தேர்வில் வெற்றி பெற்று பணிவாய்ப்பிற்காக காத்திருக்கும் பட்டதாரி,இடைநிலை ஆசிரியர்களின் வாழ்விலும் மாற்றம் வருமென காத்திருப்போம்.

இப்படிக்கு
2013,2017,2019 டெட்
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்.