Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 23, 2020

புற்றுநோய்க்கு காரணமான உணவு பொருட்கள்


உருளை கிழங்கு சிப்ஸ்
உருளைகிழங்கு சிப்ஸின் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் உள்ளது. ஏனென்றால் உருளைக்கிழங்கு சிப்ஸ் தாயரிக்கும் போது அதற்கு சுவையூட்ட சேர்க்கப்படுவது தேவையற்ற பொருள்கள். இதனால் நம் உடலுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இதனை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோயை தவிர்க்கலாம்.




பதப்படுத்தப்பட்ட உணவுகள்
புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அதிகமாக உள்ளன.முக்கியமாக பதப்படுத்த இறைச்சிவகைகள் இதில் அதிக பங்கு வகிக்கின்றன.தற்போது சந்தைகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகள் கிடைக்கின்றன.இதை பதப்படுத்துவதற்கு கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.இதனால் 44%அளவு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
தாவர எண்ணெய்
தாவர எண்ணையில் அளவுக்கு அதிகமாக ஒமேகா 3 ஆசிட் உள்ளது.எந்த உணவுமே அளவுக்கு அதிகமாக சேரும் பொழுது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.அதேபோல் தான் தவர எண்ணையில் உள்ள ஓமெகா 3 ஆசிட் உடலில் சேரும் போது அது உடலில் இதயநோய் மற்றும் புற்றுநோய் ஏற்படலாம்.




கோதுமைமாவு
கோதுமைமாவு உடலுக்கு நல்லது தான்.ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கோதுமையில் கிளைசமிக் எனும் ஒருபொருள் அதிகமாக உள்ளது.இதனை அதிகமாக உணவில் சேர்க்கும் போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகமடைய செய்கிறது.
டின் உணவுகள்
டின்னில் வைத்து விற்கப்படும் உணவுகள் அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.உணவுகளை டின்னில் வைக்கும் போது டின்னில் உள்ள கெமிக்கல் உணவில் கலந்து உடலுக்கு அதிகமான அளவில் தீங்கு விளைவிக்கின்றது.புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் அதிகப்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துகிறது.