Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 10, 2020

நீட் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி;ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் துறை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து இயக்குனர் ரகுநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) கட்டாயமாக்கியுள்ளது.



புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) 2020 ல் கலந்து கொள்ளும் பொருட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பயிற்சி மையங்களில் ஒரு மாதம் பயிற்சி அளிக்க துறை மூலம் உத்தேசித்துள்ளது.பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்டவைகளுடன், நீட் 2020க்கு விண்ணப்பித்ததின் உறுதிப்படுத்துதல் சான்று ஆகியவற்றின் நகல்களுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.



விண்ணப்பத்தினை www.py.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிற்சி துவங்கும் நாள் இடம் ஆகிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.