Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 11, 2020

கெட்ட கொழுப்பு குறையலயா? இதை சாப்பிடுங்க சட்டுன்னு குறையும்னு ஆய்வு சொல்லுது..


ஹார்ட் அட்டாக் வரவே கூடாதுன்னு சொல்றவங்க ஒண்ணு மட்டும் சாப்பிட்டா போதும்னு ஆய்வு சொல்லுது....
வயதான பிறகு வரக்கூடிய நோயெல்லாம் வளரும் இள வயதிலேயே வந்துவிடுகிறது. அப்படி காவு வாங்கும் நோய்களில் முக்கியமானது ஹார்ட் அட்டாக். இதயத்தை பத்திரமா வைத்துகொண்டால் எந்த பிரச்சனையும் வராது. அதற்கு உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டுமென்றால் இரத்த நாளங்களில் அடைப்பு இருக்க கூடாது. அப்படியென்றால் நாளங்களில் அடைப்பு இருக்க கூடாது. அடைப்பு உருவாக கூடாது என்றால் கொழுப்பு கெட்ட கொழுப்பு படிய கூடாது... இப்படி வாலு போய் கத்தி வந்ததுங்கிற கதையா நீண்டுக்கிட்டே போகிற அளவுக்கு சொல்லிட்டே போகலாம்.





ஆனால் இதற்கு ஒரு தீர்வு உண்டு என்பது தெரியுமா? நம்சமையலறையில் இருக்கும் பூண்டு தான் அது. பூண்டின் வாசனையால் அதன் அருகில் செல்ல மாட்டோம். அதனால் தான் காரமிக்க மசாலா அரைக்கும் போது அதை பயன்படுத்துகிறோம். ஆனால் இதன் மருத்துவ குணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.




தினமும் 4 பல் பூண்டை நெருப்பில் தோலோடு அவை கருப்பாக இருக்கும் வரை வைத்து சுடுங்கள். பிறகு தோல் நீக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் வெளியேறும் இதனால் இரத்த நாளங்களில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் வெளியேறும். இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் இதயத்துக்கு தடங்கலின்றி இரத்த ஓட்டம் கிடைக்கும். உடல் முழுக்க ஆக்ஸிஜன் தடையின்றி கிடைக்கும். இதயம் பத்திரமாக இருக்கும்.