பட்ஜெட்டில் ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகுமா?


பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கேரளாவில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி குறிப்பிட்டுள்ள ரூ.57 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல ஆண்டுகளாக ரூ.15 ஆயிரம் மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. அதனால் தமிழக உயர்கல்வித்துறை இன்று வெளியிடும் பட்ஜெட்டிலாவது கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு கவுரவ விரிவுரையாளர்கள் கூறினர்.