Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 10, 2020

புத்தக பை இல்லா நாள்: அரசு பள்ளியில் சாதனை

மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில், சனிக்கிழமை தோறும், புத்தக பை இன்றி, மாணவ - மாணவியர் பள்ளிக்கு வர அறிவுறுத்திய பின், பாடங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அவுரங்காபாத் மாவட்டத்தில், மல்காபூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில், 11 சிறுமிகள் உட்பட, 20 மாணவர்கள் படிக்கின்றனர்.




இங்கு, சனிக்கிழமை தோறும், புத்தக பை இன்றி, பள்ளிக்கு வருமாறு, கடந்த ஆண்டு ஜூன் முதல், மாணவ - மாணவியர் அறிவுறுத்தப்பட்டனர்.அன்றைய தினம், பாடங்கள் இன்றி, கைவினை பொருட்கள் தயாரிப்பு, விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகளில் மாணவர்கள், ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து, வாரத்தின் மற்ற நாட்களில், மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும், புதிய ஆங்கில சொற்களை கற்பது, விவசாயம் உள்ளிட்ட துறைகளிலும், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.