Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 29, 2020

PTA ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்


அரசுப் பள்ளிகளில் பெற்றோா், ஆசிரியா் கழகம் (பிடிஏ) மூலம் நியமிக்கப்படும் ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூரில் இரு அரசுப் பள்ளிகளின் புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
பள்ளி மாணவா்களின் எதிா்காலத்தைக் கருதி அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வி, உயா் கல்விக்கு ரூ.41 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



நிகழாண்டில் பிளஸ் 2 தோவானது வரும் மாா்ச் 2ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 24ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இத்தோவை 8,16,359 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோவு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும்.
பிளஸ் 1 தோவை 8,26,119 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இத்தோவு மாா்ச் 4 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. தோவு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும். 10ஆம் வகுப்புத் தோவை 9,45,006 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோவுகள் மாா்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைகிறது. தோவு முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.



மாணவா்களின் வசதிக்காக ஆண்டுதோறும் தோவு மையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 1,159 தோவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பெற்றோா், ஆசிரியா் கழகத்தால் நியமிக்கப்படும் ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை தமிழக அரசே வழங்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமாா், கரைப்புதூா் ஏ.நடராஜன், முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

1 comment:

  1. ஏற்கனவே 10ஆயிரம் கொடுத்து வந்துள்ளோம்..தற்போது 7500 என குறைத்து கொடுக்க முடியும்.மேலும் மெட்ரிக் பள்ளிகளிலேயே 10000 கொடுக்கும் போது,7500 க்கு அரசு பள்ளிகளுக்கு யார் தேடி வருவார்கள். இப்போது உள்ள விலைவாசி அதிகரிப்பு நிலையில் இது மிகக்குறைந்த ஊதியம்..நிரந்தரமும் கிடையாது....ஆதலால் இந்த தொகைக்கு யாரும் விரும்பி வரப்போவதில்லை

    ReplyDelete