Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 5, 2020

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 70,000 ஆசிரியர்களின் நிலை என்ன? இனி ஆசிரியர் தகுதி தேர்வு தேவையா?


கடந்த 2013 - ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நிய மன ஆணை வழங்கப்படா தவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என கடந்த ஆண்டு ஜனவரி 28 - ம் தேதி அமைச்சர் செங் கோட்டையன் அறிவிப்பு மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது என்றும் அறிவித்தார் . ஆனால் எதிர்பார்த்து காத்திருந்து ஓராண்டு முடிந்து போன நிலையில் அமைச்சரின் அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாகி போனது .




2013 - ம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 70 ஆயிரம் பேர் அரசின் பணி நியமன ஆணையை எதிர்பார்த்து 7 ஆண்டுகளாக காத்துக்கி டக்கிறார்கள் . இந்த நிலையில் தற் போது மீண்டும் 2020 ஜூலையில் ஆசிரியர் தகு தித்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்து அட்டவணை வெளியிட்டுள்ளது . அப்போது ஏற்கனவே தேர்ச்சி பெற்ற 70 ஆயிரம் பேரின் கதி என்னவாகும் ? என தெரியவில்லை. எனவே அமைச்சர் அறிவித்தபடி 2013 - ல் ( டி .இ .டி ) டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசி ரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நிய மன ஆணையை வழங்க வேண்டும் அது வரை தற் போது அறிவித்த ( டி . இ . டி . ) டெட் தேர்வைரத்து செய்ய வேண்டும் என தமிழக மதச்சார்பற்ற ஜனதாதள மாநிலப் பொதுச்செயலா ளர் ஜான்மோசஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .